Home /News /tamil-nadu /

சாலையில் செல்பவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவது போல சசிகலா பயன்படுத்துகிறார் - பொன்னையன்

சாலையில் செல்பவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவது போல சசிகலா பயன்படுத்துகிறார் - பொன்னையன்

பொன்னையன்

பொன்னையன்

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். அதிமுகவில் இரு கண்களாக இபிஎஸ், ஓபிஎஸ் இருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அதிமுக கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதைப்போலத் தான் சாலையில் செல்பவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவது போல சசிகலா பயன்படுத்துகிறார் என்றும் அதிமுகவிற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் எனவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார்.

    இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவிக்கப்பட உள்ளது. இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார். அதிமுகவிற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம். சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தை வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.

    அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். அதிமுகவில் இரு கண்களாக இபிஎஸ், ஓபிஎஸ் இருக்கின்றனர். கட்சிக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது. அதிமுகவிலிருந்து அன்வர்ராஜாவை நீக்கியது சரியான முடிவு என்று கூறினார் ஒற்றை தலைமை வேண்டும் என யாரும் எதிர்பார்க்கவில்ல என்று கூறிய பொன்னையன், அதிமுகவின் எதிர்காலம் செழிப்பாக இருக்கும், நகராட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றார்.

    Must Read : தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கிடையாது.. பொது இடங்களுக்கு செல்லவும் தடை

    முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு, பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு வழக்கில் கூட வெற்றி பெற முடியாது. அதிமுகவின் கட்சி கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதைப்போலத்தான் சாலையில் செல்பவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவது போல சசிகலா பயன்படுத்துகிறார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Ponnaiyan, Sasikala

    அடுத்த செய்தி