ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இரட்டை வேடம் போடும் பாஜக.. பொன்னையன் பேச்சால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு

இரட்டை வேடம் போடும் பாஜக.. பொன்னையன் பேச்சால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு

பாஜக குறித்து பொன்னையன் பரபரப்பு கருத்து

பாஜக குறித்து பொன்னையன் பரபரப்பு கருத்து

அதிமுக இருக்கும் போது பாஜகதான் பிரதான எதிர்க்கட்சி என சமூக வலைதளத்தில் பிரசாரம் செய்யப்படுவது ஏன் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அரசின் திட்டங்கள், கட்சிகளின் நிலைப்பாடு ஆகியவற்றை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் ஆளும் திமுக தரப்பு தற்போது ஐடி விங் 2.0 என்பதை உருவாக்கி சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறது. பாஜகவும் தன் ஐடி விங்கை பலப்படுத்தி உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ சமூகவலைதளங்களில் தீவிரமாக செயல்படவில்லை.

  இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை, பொன்னையன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தமிழ்நாட்டில் அதிமுக-தான் எதிர்க்கட்சி. ஆனால் பாஜக தன்னை எதிர்க்கட்சி போல முன்னிறுத்த பார்க்கிறது. அதை முறியடிக்க வேண்டும். இதற்கு இணையத்தில் ஐடி விங் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள பொன்னையன், அதிமுக இருக்கும் போது பாஜகதான் பிரதான எதிர்க்கட்சி என சமூக வலைதளத்தில் பிரசாரம் செய்யப்படுது ஏன் என கேள்வி எழுப்பினார்.

  அதிமுகவை தாண்டி தமிழ்நாட்டில் பாஜக வளர பார்ப்பதாகவும், பாஜக தங்களை எதிர்க்கட்சி போல முன்னிறுத்தி கொள்வதாகவும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கருதுகின்றனர். இது மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும் என்றும் ஒருவேளை அதிமுக சேர்க்கவில்லை என்றால் பாஜகவில் அவரை வரவேற்போம் என்றும் நயினார் நகேந்திரன் கூறியிருப்பதும் அதிமுக தலைமைக்கு அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

  தமிழ்நாட்டில் 25 எம்பிக்களை பெறுவோம் என்று அண்ணாமலையும் நயினார் நகேந்திரனும் தொடரந்து கூறி வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவிக்கும் நிலையில் பாஜக எப்படி 25 எம்பிக்களை பெறும் என்றும் மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

  இதையும் படிங்க: ஊழல் பட்டியல்... கோபாலபுரத்தை கைகாட்டும் திமுக அமைச்சர்கள் - அண்ணாமலை பேச்சால் பரபரப்பு

  நயினார் பேச்சால்தான் ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. இந்த பின்னணியில் நயினாரின் புதிய பேச்சு மோதலை மேலும் அதிகப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: AIADMK, AIADMK Alliance, Ponnaiyan