தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது
அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, வேப்பனபள்ளி தொகுதியில் கிராமங்கள் அதிகமாக இருப்பதாகவும், இங்கு அரசு கலைக்கல்லூரி இல்லை என்றார். எனவே கல்லூரி இல்லாத தொகுதிக்கு முன்னூரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், இந்த தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி துவக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அரசியல் பாகுபாடு இல்லாமல் முதலமைச்சர் செயல்பட்டு வருவதாகவும், காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்று அரசு கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதே போல மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் கேட்டதற்கு மணப்பாறையில் ஒரு அரசு கலைக்கல்லூரியும், பாமக சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் கல்லூரி வலியுறுத்திய நிலையில் கல்லூரிகளை முதலமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின் போது பேசிய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், புறநானூற்றுப் பாடலில் புலியை அடித்து விரட்டுவார்கள், ஆங்கிலேயரின் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி துப்பாக்கிக்கு பலியான குற்றப் பரம்பரையைச் சேர்ந்த மாயக்காளை தொப்புள் கொடி உறவுகளான பெண்கள் படிக்க கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Must Read : முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. உறவுக்கார பெண்ணுடன் 2-வது திருமணம் -மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
இதற்கு பதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உசிலம்பட்டி தொகுதியை நான் நன்றாக அறிவேன் என்றும், அங்குள்ள கல்லூரிகளின் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.