Home /News /tamil-nadu /

அடேங்கப்பா... புத்தாண்டு வசூலை மிஞ்சிய பொங்கல் டாஸ்மாக் விற்பனை...

அடேங்கப்பா... புத்தாண்டு வசூலை மிஞ்சிய பொங்கல் டாஸ்மாக் விற்பனை...

டாஸ்மாக்

டாஸ்மாக்

Tasmac sales: தமிழகத்தில் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை நாட்களில் அதை விட அதிகமாகவும் மது வகைகள் விற்பனை ஆகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.317.08 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த மூன்று நாட்களில் ரூ.675.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.144.74 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

    இதில் முக்கியமாக பொங்கல் தினத்தை ஒட்டிய சனி, ஞாயிறு தினத்தில் டாஸ்மாக் விடுமுறை என்பதால் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தமிழகத்தில் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை நாட்களில் அதை விட அதிகமாகவும் மது வகைகள் விற்பனை ஆகின்றன.

    Also read... மாமியாரை தரக்குறைவாக பேசிய மருமகனை வெட்டி கொன்ற மாமனார்: திருமணமாகி 6 மாதத்தில் நடந்த துயரம்!

    இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் ரூ. 317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கடந்த ஜனவரி 12-ம் தேதியன்று ரூ.155.06 கோடிக்கும், ஜனவரி 13-ம் தேதி ரூ.203.05 கோடிக்கும் மதுபானங்களை விற்பனையாகியிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது புத்தாண்டு விற்பனையை விட  அதிகமாகும்.

    புத்தாண்டுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் 147 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில், பொங்கல் டாஸ்மாக் விற்பனை புத்தாண்டு விற்பனையை மிஞ்சியுள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 68.76 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 59.65 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 59.28 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 63.87 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் நேற்று ஒரே நாளில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: டாஸ்மாக் மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து... பாட்டில்களை அள்ளிச் சென்ற ’குடி’மக்கள்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Tasmac

    அடுத்த செய்தி