ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 5 சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில், கொச்சிவேலி - தாம்பரம், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல், தாம்பரம் - திருநெல்வேலி என, ஐந்து சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்

அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில்

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலி யிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

மேலும் இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டணம் ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

தாம்பரம் - திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில்

திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூண்கள் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

தாம்பரம் - திருநெல்வேலி ரயில்

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எர்ணாக்குளம் - சென்னை சென்டரல்

எர்ணாக்குளம் - சென்னை சென்டரல் சிறப்பு கட்டண ரயில் (06046) ஜனவரி 12 அன்று எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் சென்னை சென்டரல் - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில் (06045) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 13 அன்று மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு அன்று நள்ளிரவு 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

First published:

Tags: Pongal 2023, Special trains