பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல படையெடுத்த மக்கள்!

கார்கள் மூலம் வெளியூர் செல்வோர், ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியையும், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு வழியையும் பயன்படுத்த போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

Web Desk
Updated: January 11, 2019, 11:03 PM IST
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல படையெடுத்த மக்கள்!
சொந்த ஊர் செல்லும் மக்கள் (கோயம்பேடு)
Web Desk
Updated: January 11, 2019, 11:03 PM IST
பொங்கல் விடுமுறை  நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் அரசு விடுமுறை உள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  சென்னையிலிருந்து மட்டும் 14,263 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து 10,445 பேருந்துகள்  என மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் 30 மையங்களில்,  கடந்த 9ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சிறப்பு பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும்,  ஒசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும், திண்டிவனம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், சேலம், கோவை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வழக்கமாக பெருங்களத்தூரில் நிற்காது என்றும், அதற்கு பதிலாக ஊரப்பாக்கத்தில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கார்கள் மூலம் வெளியூர் செல்வோர், ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியையும், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு வழியையும் பயன்படுத்த போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
Loading...
6 நாட்கள் பொங்கல் விழாவை முடித்துக்கொண்டு திரும்புவதற்காக வரும் 17 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனிடையே, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதவரம், தாம்பரம் ரயில்நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு மற்றும் கே.கே.நகர் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு, 24 மணி நேரமும் சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 250 இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...