Home /News /tamil-nadu /

சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள்: கொரோனாவால் பயணிகள் வருகை குறைவு

சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள்: கொரோனாவால் பயணிகள் வருகை குறைவு

பொங்கல் சிறப்பு பேருந்து

பொங்கல் சிறப்பு பேருந்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. எனினும் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 10,468 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை முதல் சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்கியது.

    கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 420 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் விதமாக பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகுதான் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், பேருந்துகளில் 75 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர வைக்கப்பட்டனர்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு இல்லை- ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர் சக்கரபாணி



     கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 10 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. இதேபோல் சொந்த ஊர் செல்லும் மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, வெளிசுற்று சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


    சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்கிய முதல் நாளில் இயல்பை விட கணிசமான அளவே மக்கள் பயணம் மேற்கொண்டனர். அடுத்த இரு நாட்களும் அதிகபடியான மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோன்று கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் உட்பட 1,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அதிகளவிலும், சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்பவும் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்
    Published by:Karthick S
    First published:

    Tags: Koyambedu, Pongal

    அடுத்த செய்தி