ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Pongal 2023 special bus | பொங்கல் பண்டிகையை  ஒட்டி ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் முடிவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நம்பி தான் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் அரசு பஸ்களில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது. தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பிவிட்டன. 13, 14 ஆகிய தேதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கக்கூடிய விரைவு பஸ்களில் இடங்கள் இல்லாததால் பிற போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகையை  ஒட்டி ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் 6300 பேருந்துகளுடன் கூடுதலாக 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,

சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. ஜனவரி 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் மொத்தம் 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மட்டும் 4 நாட்களில் 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

First published:

Tags: Bus, Pongal 2023, Pongal festival, Special buses