Home /News /tamil-nadu /

வரும் 16ஆம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கப்படாது

வரும் 16ஆம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கப்படாது

பொங்கல் சிறப்பு பேருந்து

பொங்கல் சிறப்பு பேருந்து

Pongal Special Bus : தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் தலா 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,300 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே. நகர், பூந்தமல்லி, தாம்பரம் மெப்ஸ் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, பிற ஊர்களில் இருந்து மூன்று நாட்களுக்கும் 6 ஆயிரத்து 468 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக கோயம்பேடு, தாம்பரம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படவுள்ளன.

    இந்நிலையில், கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட 4 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கும் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    Also Read : ஜல்லிக்கட்டு: வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது...ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம்

    அதன்படி, சென்னையில் இருந்து இன்று வழக்கமான 2100 பேருந்துகளுடன், கூடுதலாக 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து இன்று மட்டும் 1,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    மேலும், சென்னையில் இருந்து புதன்கிழமை 1,660 சிறப்பு பேருந்துகளும், வியாழக்கிழமை 1,920 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    Read More : ‘உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்’ - கொரோனா குறித்து விஜய் ஆண்டனி ட்வீட்

    எனினும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படாது. எனவே பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்புவபர்கள் அன்றைய தினம் பேருந்தில் பயணிக்க முடியாது என்பதால், மறுநாள் திங்கள் கிழமைதான் பயணிக்க முடியும்.

    எனவே, பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு திரும்பும் பயணிகள் 16. 1 .2022 அன்று முன்பதிவு செய்தவர்கள் செலுத்திய முன்பதிவு கட்டணத்தை திருப்பி அவர்களுக்கு இரண்டு நாட்களில் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், அவர்கள் அதற்கு பதிலாக வேறொரு நாளில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிப்பு - முழு விவரம்

    இந்நிலையில், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Govt Bus, Pongal, Special buses

    அடுத்த செய்தி