ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Pongal Special Bus | பொங்கல் சிறப்பு பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு - முழு விவரம்

Pongal Special Bus | பொங்கல் சிறப்பு பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு - முழு விவரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பொதுமக்களின் வசதிக்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து, மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை, சிறப்பு பேருந்து நிலையம் போன்ற தகவல்களை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பொங்கள் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை யில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து  11ம் தேதி முதல் 13ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் 5 சிறப்பு பேருந்து நிலையங்கள்

இதற்காக மாதவரம் பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம்((MEPZ), தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: நெடுஞ்சாலை ஹோட்டல்களில் உணவு தரமாக இல்லையென்றால் டெண்டர் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை

பிற ஊர்களில் இருந்து 16,709 பேருந்துகள் இயக்கம்

அதே போல பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை, நாள் தோறும் இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும். கடந்த 10 நாட்களுக்கு மேல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம்) பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையமும் செயல்பட்டு வருவதாக கூறினார்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்- புகார் எண் அறிவிப்பு

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு ஆம்னி பேருந்துகள் கட்டணம் வசூலிப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது குறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு

கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையையொட்டி 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: தமிழக அரசு

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.பொதுமக்களின் வசதிக்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து, மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Pongal, Special buses