ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு இன்று முதல் தொடக்கம்... முன்பதிவு செய்வது எப்படி?

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு இன்று முதல் தொடக்கம்... முன்பதிவு செய்வது எப்படி?

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தொடக்கம்

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தொடக்கம்

Pongal 2023 special bus | முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையத வசதியான tnstc official app மற்றும் WWW.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து போக்குவரத்து துறையில் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், காவல்துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “இவ்வருடம் பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல்முறையாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் செல்வதற்கும் பூவிருந்தவல்லி  பை-பாஸ் பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்வதற்கும் மற்றும் சேலத்திலிருந்து பெங்களூருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 12 முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன. கோயம்பேடு, தாம்பரம் தவிர இந்த வருடம் பூந்தமல்லியில் முதல்முறையாக முன்பதிவு மையம் செயல்பட இருக்கிறது. அரசு பேருந்துகளில் வழக்கமான அதே கட்டணம் வசூலிக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து மற்ற 4 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையத வசதியான tnstc official app மற்றும் WWW.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி நேரத்திலேயே தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கட்டணங்கள் கட்டண விவரங்கள் குறித்து பேசி முடிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நேரத்தில் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், “திக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக  புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் குறித்து 18004256151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்களில் புகார் அளிக்கலாம். மேலும் அரசு பேருந்துகளின் இயக்கம் மற்றும் இதர புகார்களை அளிக்க, 9445014450, 9445014436 என்ற எண்களை தொடர்புக்கொள்ளலாம்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Pongal 2023, Special buses, Tamil Nadu