பொங்கல் விற்பனை சென்னையில் மட்டும் மந்தம்..! என்ன காரணம்..?

நாளைய தினம் இந்த நிலை மேலும் மோசமடையும் எனவும் கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொங்கல் விற்பனை சென்னையில் மட்டும் மந்தம்..! என்ன காரணம்..?
பொங்கல் சந்தை
  • News18
  • Last Updated: January 14, 2020, 8:18 AM IST
  • Share this:
பொங்கல் பண்டிகையையொட்டி தென்மாவட்ட சந்தைகளில் பூ, பழம் மற்றும் காய்கறிகளின் விற்பனை களைகட்டியுள்ளன. சென்னையில் மட்டும் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு மற்றும் காய்கறிகளை படையிலிட்டு வழிபடுவது வழக்கம். இதையொட்டி, நெல்லை பாளையங்கோட்டை உழவர் சந்தையில் 3 நாட்களில் 200 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன. ஒரே இடத்தில் அனைத்து விதமான காய்கறிகளும் கிடைப்பதால் மக்கள் உற்சாகத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதேபோல், மதுரை பூ மார்க்கெட்டிலும் விற்பனை களைகட்டியுள்ளது. அதிகாலையில் முல்லை, மல்லி உள்ளிட்ட வகை பூக்கள் விற்பனை சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டபோதும், வேறு வழியின்றி இல்லத்தரசிகள் பூக்களை வாங்கிச் சென்றனர்.


அதேசமயம், பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதால், சென்னையில் பொங்கல் விற்பனை சற்று மந்தமாகின. வழக்கமான நாட்களில் உள்ள விலையிலேயே விற்கின்ற போதிலும், வாங்குவதற்கு ஆளில்லை என வியாபாரிகள் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். நாளைய தினம் இந்த நிலை மேலும் மோசமடையும் எனவும் கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading