Home /News /tamil-nadu /

பொங்கல் தொகுப்பு : ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு

பொங்கல் தொகுப்பு : ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

ஜனவரி 3ம் தேதி முதல் இந்த பொங்கள் பரிசு தொகுப்பு அரிசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

    பொங்கல் பரிசு விநியோகம் செய்வது குறித்து கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம் பெற்றிருந்த ரொக்கப் பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் (Pongal) பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை, நெய், முழு கரும்பு ஆகியவை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

    Also Read : இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 3-வது இடம்

    ஜனவரி 3ம் தேதி முதல் இந்த பொங்கள் பரிசு தொகுப்பு அரிசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது, முன்னேற்பாடுகள் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.

    அதில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைத்து அதற்கென பிரத்தியேக தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு துணைப்பதிவாளர் நிலையில் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமித்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கபட்டு இருந்தது.

    Also Read : நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு? பிரதமர் இன்று மாலை முக்கிய ஆலோசனை

    இதன்மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத்தொகையும் வழங்கப்படுவது உறுதி என தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் இதனை தற்போது மாற்றம் செய்து மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரொக்கப் பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு பரிசு தொகுப்பு என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் கிடையாது என்பது உறுதியாகி உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைத்தாரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ration card, Ration Shop

    அடுத்த செய்தி