ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பண்டிகை - சென்னை மெட்ரோ ரயிலில் 8 லட்சம் பேர் பயணம்!

பொங்கல் பண்டிகை - சென்னை மெட்ரோ ரயிலில் 8 லட்சம் பேர் பயணம்!

மெட்ரோ

மெட்ரோ

Chennai Metro Rail : பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயிலை அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், மொத்தம் 8 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 13ஆம் தேதி 2 லட்சத்து 66 ஆயிரம் பேர் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.அதில் குறிப்பாக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 21 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரும், கிண்டியில் இருந்து 14 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோரும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருமங்கலத்தில் இருந்து 13 ஆயிரத்து 600க்கு மேற்பட்டோரும், விமான நிலையத்தில் இருந்து 12 ஆயிரத்து 900க்கும் மேற்பட்டோரும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி இருப்பதாக கூறியுள்ள நிர்வாகம்,பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் மொத்தம் 8 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

First published:

Tags: Chennai metro, Pongal 2023