Home /News /tamil-nadu /

பொங்கல் பண்டிகைக்கு கேரளாவில் விடுமுறை?.. பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பொங்கல் பண்டிகைக்கு கேரளாவில் விடுமுறை?.. பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Pongal Holiday : கேரளாவில் பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறை அளிக்க வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறை அளிக்க வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அறிவிக்கக்கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்.

    ஜனவரி 14 ஆம் தேதி, புனிதமான "தை" தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா இனி அதிக அபராதம் கட்டணும்

    ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும்  கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Holiday, Kerala, MK Stalin, Pinarayi vijayan, Pongal, Pongal festival

    அடுத்த செய்தி