2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசை ஜனவரி 16 ஆம் தேதியிலும் மக்கள் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தமிழக அரசால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன்கள் தற்போது வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தைச் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். அதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் நியாயவிலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைத்தார்களுக்குப் பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்படும்.
Also Read : தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை உண்டு - வானிலை மையம் அலெர்ட்
ஜனவரி 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசு பெறாதவர்கள் ஜனவரி 15 ஆம் நாள் பொங்கல் பண்டிகையை அடுத்து ஜனவரி 16 ஆம் நாள் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Pongal Gift