ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கலுக்கு முன் ₹1000 கிடைச்சிடும்... தமிழக அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்

பொங்கலுக்கு முன் ₹1000 கிடைச்சிடும்... தமிழக அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

Pongal Gift | தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு முன் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரூ.1000 ரொக்கத்தை பொங்கலுக்கு முன் கிடைக்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் வரை நடைபெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். அதே தேதியில் மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 2 ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 9 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் முன் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு கிடைக்குமா என்று ரேஷன் அட்டைத்தாரர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் பொங்கலுக்கு முன் அனைவருக்கும் ரூ.1000 கிடைக்கும் விதமாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பரிசினை பொங்கல் திருநாளுக்கு முன்னர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நியாய விலை கடைகளுக்கு ஜனவரி 13 (வெள்ளிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக ஜனவரி 27 (வெள்ளிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் மாவட்ட ஆட்சி தலைவர்களை சாரும் .

சென்னையை பொறுத்தமட்டில் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு, துணை ஆணையாளர் (நகரம்) தெற்கு ஆகியோர் இப்பணியை முழுமையாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பான அலுவலர்கள் என்று அறிவிக்கப்படட்டுள்ளது.

First published:

Tags: Pongal 2023, Pongal Gift