தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதே தேதியில் மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கடந்த 2020 அக்டோபரில் இணைந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைவரும் எந்த ரேஷனிலும் பொருட்கள் வாங்கி பயனடையலாம். தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முகவரி மாறி சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமலேயே தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 09 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளதால் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றபின் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரூ.1000 ரொக்கத்தை எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெளிவான விளக்கமளித்துள்ளார். அதாவது பொங்கல் பரிசு தொகுப்பை எந்த ரேஷன் கடையிலும் பெற்று கொள்ள அனுமதி அளித்தால் அதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்தந்த ரேஷன் கார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும்.
பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கனை பெற்று கொண்ட அதற்கான நாளில் வந்து பெற்று கொள்ளலாம். இதில் ஏதும் முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Pongal Gift