ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை கிடைப்பதில் சிக்கல்? காரணம் என்ன?

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை கிடைப்பதில் சிக்கல்? காரணம் என்ன?

பொங்கல் பரிசு வேட்டி சேலை

பொங்கல் பரிசு வேட்டி சேலை

ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கலுக்கு அரசு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை அனைவருக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் கடைகளில் வழங்குவதற்காக, தலா 1.75 கோடி வேட்டிகள் மற்றும் சேலைகளை உற்பத்தி செய்ய கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆர்டர் வழங்கியுள்ளது.

ஆனால், வழக்கமாக 6 மாதங்களுக்கு முன்பு ஆர்டர் வழங்குவதற்கு பதிலாக, தற்போது 3 மாத அவகாசமே கொடுக்கப்பட்டதால் பொங்கலுக்குள் முழு உற்பத்தி சாத்தியமில்லை என ஈரோடு மாவட்ட நெசவாளர்கள் தெரிவித்தனர்.

இதுவரை, 27% வேட்டிகள், 40% சேலைகள் மட்டுமே தயாராகி இருப்பதாகவும், தொடக்கத்தில் தரமில்லாத நூல்களை வழங்கியதால் உற்பத்தி மேலும் தாமதமானதாகவும் நெசவாளர்கள் கூறியுள்ளனர்.

First published:

Tags: CM MK Stalin, Pongal 2023, Pongal Gift