முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்படும்!

அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்படும்!

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை முன்கூட்டியே குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழுப் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களை சாரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமையான ஜனவரி 7ம் தேதி அன்று நியாய விலைக்கடைகள் செயல்படும் எனவும் அதற்கு பதிலாக ஜனவரி 15ம் தேதி விடுமுறை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also read... முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் சென்னையில் ஆலோசனை!

பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை முன்கூட்டியே குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also read... அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி!

குடும்ப அடைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதும் அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Pongal Gift, Ration Shop