ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கலுக்கு தேங்காய் கொடுங்க.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

பொங்கலுக்கு தேங்காய் கொடுங்க.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

அண்ணாமலை

அண்ணாமலை

BJP Annamalai : தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் தேங்காயையும் சேர்த்து வழங்கவேண்டும் என்று பாஜக விவசாய அணி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. மேலும், போராட்டத்தில் 2 லட்சம் தேங்காய்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தென்னையில் இருந்து கிடைக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. அவற்றை மீட்கவும் தமிழகத்தில் 11 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ஆதரிக்கவும், நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், சத்துணவில் தேங்காய் பால் போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் தேங்காய்க்கு சரியான விலை இல்லை என்று தென்னை விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தமிழக அரசே கொள்முதல் செய்து நியாய விலைக்கடையில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எனவே உடனடியாக திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். தமிழகத்தில் உள்ள பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தென்னை விவசாயம் செழிக்க பொங்கல் தொகுப்பில் தேங்காயும் சேர்த்து வழங்குவதோடு தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை தேங்காய் கொள்முதல் விலை, கொப்பரை தேங்காய் விலை ஆகியவற்றை உயர்த்தி அரசே கொள்முதல் செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Tamil News, Tamilnadu