முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொங்கல் பரிசை வாங்காத மக்கள்.. அரசுக்கே திரும்பிய 44 கோடி ரூபாய்..!

பொங்கல் பரிசை வாங்காத மக்கள்.. அரசுக்கே திரும்பிய 44 கோடி ரூபாய்..!

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1  கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2,18,86,123 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் பரிசுப் பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

சென்னையை பொறுத்தவரை வட சென்னையில் 10,18,728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10,39,552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வடசென்னையில் 9,83,005 பேரும், தென் சென்னை யில் 9,90,014 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர்.

வடசென்னையில் 35,723 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49,538 குடும்ப அட்டைதாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8026 ரேஷன் அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 ரேஷன் அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 ரேஷன் அட்டை தாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் 4,39,669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43. 96  கோடி பணம் திரும்பி வந்துவிட்டது. அத்தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Pongal Gift