ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மாற்றம்.. புதிய தேதி மற்றும் டோக்கன் வழங்கும் நாட்கள் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மாற்றம்.. புதிய தேதி மற்றும் டோக்கன் வழங்கும் நாட்கள் அறிவிப்பு

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

இதற்கான டோக்கன் டிசம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 02,03, 04 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த தொகுப்பில் ரூ. 1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  பொங்கல் பரிசில் கரும்பை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

மேலும், இதற்கான டோக்கன் டிசம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 02,03, 04 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 டோக்கன்கள் விநியோகம் இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, நகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 300 அட்டைதாரர்களுக்கும், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு 200 அட்டைகளுக்கும் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து கொடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 05 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Pongal Gift, Ration Shop, TN Govt