ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசு: ரூ.1000 வழங்கும் தேதி மீண்டும் மாற்றம்.. டோக்கன் வழங்கும் நாட்கள் இதுதான்!

பொங்கல் பரிசு: ரூ.1000 வழங்கும் தேதி மீண்டும் மாற்றம்.. டோக்கன் வழங்கும் நாட்கள் இதுதான்!

பொங்கல் பரிசு டோக்கன்

பொங்கல் பரிசு டோக்கன்

Pongal Gift | பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான டோக்கன் மற்றும் பரிசு வழங்கும் தேதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

முதலில் கரும்பு இந்த தொகுப்பில் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து கரும்பை சேர்க்க கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு ஒரு முழு கரும்பை சேர்த்து வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் டிசம்பர் 30 தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை வீடுவீடாக விநியோகிக்கப்படும் என மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் ரூ.1000 வழங்குவதை முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஜனவரி 5ம் தேதி மாற்றப்பட்டு தற்போது ஜனவரி 9ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Pongal festival, Pongal Gift, Ration Shop