பொங்கல் திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. திண்டுக்கல் பூ சந்தையில் 20 டன் ஆக இருந்த பூக்களின் வரத்து 40 டன் ஆக அதிகரித்துள்ளது.
பொங்கல் திருநாள் நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. பொங்கலுக்கு ஒருநாளே உள்ள நிலையில் புத்தாடை, இனிப்பு பலகாரங்கள் விற்பனை மும்முரமாக உள்ளது. மறுபுறம், பச்சரிசி, கரும்பு, மஞ்சள், பூ ஆகியவற்றின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் பூ சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
.
திண்டுக்கல் மாநகர் மத்தியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாக பூச்சந்தை. திண்டுக்கல்லை சுற்றியுள்ள பெருமாள் கோவில் பட்டி, வெள்ளோடு, நரசிங்கபுரம் , சின்னாளபட்டி, பெரியகோட்டை, ஜாதி கவுண்டன்பட்டி, அம்பாத்துரை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் பூ விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் பூக்களை அண்ணா வணிக வளாகத்தில் வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்த சந்தைக்கு சென்னை,சீர்காழி, சிதம்பரம், மாயவரம், புதுக்கோட்டை, தாராபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கேரளா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த மாதம் முகூர்த்த காலம், விசேஷங்கள் இல்லாததாலும் கொரோனோ பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் ஆலயங்களை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு இட்டதாலும் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.
இதையும் படிங்க: பொங்கலை ஒட்டி ஞாயிறு ஊரடங்கை திரும்பப் பெற்ற வேண்டும் : முதல்வருக்கு வ.கெளதமன் கோரிக்கை
தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல் பூ சந்தைக்கு 20 டன் பூக்கள் வரத்து இருந்த இடத்தில் 40 டன் பூக்கள் வரத்து வந்துள்ளது. பூக்களை வாங்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தந்துள்ள காரணத்தாலும் பொங்கல் திருநாளை முன்னிட்டும் வீழ்ச்சி அடைந்த பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்தது.
சென்ற வாரம் 1000 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ 2, 500 ரூபாய்க்கும் 700 விற்பனையான கனகாம்பரம் 1,500 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கு விற்பனையான ஜாதிப்பூ 1000 ரூக்கும் 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப்பூ 1500 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கு விற்பனையான சம்மங்கி பூ 110 ரூபாய்க்கும் செவ்வந்திப்பூ 200 ரூபாய்க்கும் ரோஜா பூ செண்டுமல்லி 50 ரூபாய்க்கும் கோழிக்கொண்டைபூ 80 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் படிங்க: ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal, Pongal festival