பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதிலாக அவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்த பரிசு பொருள் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 14,60,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படாமல் உள்ளது.
இதையும் படிங்க: எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
எனவே, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத் தொகையான ரூ.1000ஐ செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal Gift, Ration card