முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொங்கல் பண்டிகை: ஜனவரி 13-ம் தேதி பயணத்திற்கு இன்று முன்பதிவு..!

பொங்கல் பண்டிகை: ஜனவரி 13-ம் தேதி பயணத்திற்கு இன்று முன்பதிவு..!

பேருந்து சேவை ரத்து

பேருந்து சேவை ரத்து

pongal 2023 | அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜனவரி. 13-ம் தேதி பயணத்திற்கு இன்று முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மேலும் பண்டிகை நாட்களின் போது முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். எனவே காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளுக்கு30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் ஜனவரி 12-ம் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்பதிவு ஆரம்பமானது.

பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் நேற்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்.

Also see... Gold Rate | ஒரு சவரன் தங்கம் விலை ரூ.680 உயர்வு... வெள்ளி விலையும் உயர்வு

ஜனவரி 13-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முன்பதிவு செய்ய வேண்டும். tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Pongal, Train Ticket Reservation