ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

300 வீரர்கள், 800 காளைகள்... தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

300 வீரர்கள், 800 காளைகள்... தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Avaniyapuram Jallikattu | 300 வீரர்கள், 800 காளைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக முன்னதாக மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதல் சுற்றில் 25 வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்று பங்கேற்கும் வீரர்கள் மஞ்சள் டி சர்ட் அணிந்து விளையாடுகிறார்கள். முதல் காளையாக வெளிவந்த விக்ரம் பிடிப்பட்டது. மாலை 4 மணி வரை நடைபெறும் போட்டியில் காளைகளை எதிர்கொள்ளத் தயாராக வீரர்கள் காத்திருக்கின்றனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்ககாசு வழங்கப்படுகிறது. மாடுபிடி வீரர்களுக்காக மஞ்சள்,ஊதா, ஆரஞ்சு, பச்சை, ரோஸ் உள்ளிட்ட வண்ணங்களில் ஆடைகள் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் வீரருக்கு கார் மற்றும் பசு மாடும், இரண்டாவது வீரர் மற்றும் காளைக்கு இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படுகிறது.

First published:

Tags: Avaniyapuram, Jallikattu, Pongal 2023