ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த தமிழக அரசு.. முழு விவரம்..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த தமிழக அரசு.. முழு விவரம்..!

பொங்கல் போனஸ்

பொங்கல் போனஸ்

Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்கிட முதமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்ட மிகை ஊதியம் வழங்கப்படும்.

இதேபோல், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லறை செலவினங்கள் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ,1000 மிகை ஊதியம் வழங்கப்படும்.

மேலும் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.


First published:

Tags: Pongal 2023, Tamilnadu, Tamilnadu govt