கோட்சே மாபெரும் குற்றத்தை செய்தவர் என்ற அண்ணாமலையின் கருத்து அகில இந்திய தலைமையின் கருத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார் என
பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் காந்தி்அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விடுதலை பெற்ற இந்தியாவிற்கு காங்கிரசிற்கு பணி இல்லை, கலைத்துவிடுங்கள் என முதலில் கூறியவர் காந்தி. காந்தி கூறிய வார்த்தை காப்பாற்றபட்டிருந்தால் காங்கிரசுக்கு தற்போது இந்த அவலநிலை ஏற்பட்டிருக்காது.
கோட்சே குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதில் மாற்று கருத்து இல்லை. கோட்சேவிற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பதாக சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரப்பபடுகிறது, கோட்சே பெரும் குற்றம் செய்தவர் என்ற மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு பாஜகவின் அகில இந்திய தலைமையின் முடிவை மாநில தெளிவுபடுத்தியுள்ளார்.
Also Read : பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பெண் வைத்த கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெட்ரோல் ,டீசல் விலை குறைக்க வேண்டும் என விலையேற்றம் ஏற்பட்டிருப்பது மத்திய அரசுக்கு சந்தோஷம் இல்லை , விலைய குறைய நடவடிக்கை எடுக்கப்படும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்கு கொண்டு வரகூடாது மாநில அரசுகள் சொல்கிறது. மத்திய அரசுக்கு இதில் சம்பந்தமே இல்லை.
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும், திமுக அரசின் செயல்பாடு் ப்ளஸ் மைனாஸாக தான் உள்ளது , அரசியல் கூட்டங்கள், தேர்தல்களுக்கு அனுமதி்அளிக்கப்பட்ட நிலையில் கோவில்களில் பக்தர்கள் வணங்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.