Home /News /tamil-nadu /

"சில்லறைகள் விஞ்ஞானிகள் போல பேசக் கூடாது" - பொன். ராதாகிருஷ்ணன் காட்டம்

"சில்லறைகள் விஞ்ஞானிகள் போல பேசக் கூடாது" - பொன். ராதாகிருஷ்ணன் காட்டம்

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அரசியல் விஞ்ஞானிகள், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவிடாமல் தடுக்கின்றனர் என்று பொன். ராதாகிருஷ்ணன் காட்டமாக தெரிவித்தார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு முன்னர் அனைத்து அம்சங்களும் யோசிக்கப்பட்டதாகவும்,  அல்லறைகளும் சில்லறைகளும் விஞ்ஞானிகள் போல பேசக் கூடாது எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டு உள்ளது. இந்த பின்னடைவுக்கு அடிப்படையாக இருப்பது திமுகதான். சுகாதார துறை பின்னுக்கு சென்றதற்கு அரசை மட்டும் குறை சொல்லாமல் திமுகவும் சேர்த்து பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஒவ்வொரு விசயத்திலும் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தான், வேறு யாரோ காரணம் என்பது போல் போராடுகின்றனர். இது போன்ற ஏமாற்று வேலைகள் இனி நடக்காது. தமிழக மக்கள் விழிப்படைய தொடங்கிவிட்டனர்.

கூடங்குளத்தில் அணு விஞ்ஞானிகள் ஆலோசித்து முடிவு எடுக்கின்றனர். தமிழகத்தில் உள்ள சில்லறைகள் விஞ்ஞானிகளாக மாறக்கூடாது. அயல்நாட்டு கைக்கூலிகள் விஞ்ஞானிகளாக மாறுவதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அணு கழிவுகளால் பாதிப்பு ஏற்படும் என்றால், வேறு எந்த காரணத்தையும் கொண்டும் அங்கு வைக்க கூடிய வகையில் அரசு இருக்காது. அந்த நிறுவனமும் ஒத்துக் கொள்ளாது.

கூடங்குளத்தில் அணு கழிவு  மையம் தொடங்கலாம் என்று கூறியவர் அப்துல்கலாம். ஆனால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அரசியல் விஞ்ஞானிகள், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவிடாமல் தடுக்கின்றனர். இந்த கூட்டம் கூடிய விரைவில் அடையாளம் காட்டப்படுவார்கள்” என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Also  watch: எங்க அம்மாவ அரெஸ்ட் பண்ணாதீங்க… கதறி அழுத சிறுமி!

Published by:Anand Kumar
First published:

Tags: BJP, Kudankulam, Pon Radhakrishnan

அடுத்த செய்தி