விஜயகாந்த் எங்கள் கூட்டணியில் நிச்சயம் இணைவார் - பொன்.ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

திமுக அறிவித்துள்ள ஏழு திட்டங்களும் ஏமாற்று திட்டங்கள்.

 • Share this:
  எங்கள் கூட்டணியில் விஜயகாந்த் நிச்சயம் இணைவார் என்றும், திமுக அறிவித்துள்ள ஏழு திட்டங்களும் ஏமாற்று திட்டங்கள் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  சென்னை திருமங்கலம் பகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. சுமுகாம நடைபெற்று வருகவதாகவும், அதிமுக சார்பில் தேமுதிகவுடன் பேசி வருகிறார்கள், கேப்டன் எங்கள் கூட்டணியில் நிச்சயம் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

  திமுக அறிவித்துள்ள திட்டங்கள் குறித்த கேள்விக்கு, ஏமாற்ற திட்டங்களை அறிவிப்பதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்பது 1967 முதல் இன்று வரையிலும் தொடர்கிறதாகவும், 1967இல் மூன்று படி அரிசி தருவதாகவும், தவறினால் சவுக்கால் அடியுங்கள் எனவும் கூறினர். அப்போது மக்கள் அடிக்க தவறியதால் தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்.

  கலைஞர் நான்கு முறை முதலமைச்சராக இருந்து 5-வது முறையாக முதலமைச்சர் ஆவதற்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்தார். ஆனால், அதிலும் ஏமாற்றி விட்டனர்.

  Must Read : வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

   

  இந்த நிலையில் தற்போது அவர்கள் அறிவித்துள்ள ஏழு திட்டங்களும் ஏமாற்றுத் திட்டங்கள்” என பொ.ராதகிருஷ்ணன் தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: