தவறான வழியில் ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்த பணத்தை காங்கிரஸ் கட்சி மூலதனமாக வைத்து கன்னியாகுமரி தொகுதியை வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள் என்று பொன்.ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சி தனது முழு பண பலத்தையும் கொட்டி கொண்டு இருக்கிறார்கள்.
தவறான வழியில் ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்த பணத்தை காங்கிரஸ் கட்சி மூலதனமாக வைத்து கன்னியாகுமரி தொகுதியை வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கேரளா மாநிலத்தில் இருந்து படகுகள் மூலம் மதுவை கடத்தி வந்து கடலோர கிராமங்களுக்கு விநியோகம் செய்வதாகாக தகவல் வருகிறது என்று தெரிவித்தார்.
கடலோர கிராமங்களில் உள்ள வாக்கு சாவடிகளை கைப்பற்றி மொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்க நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், தேர்தல் பரப்புரையின் போது யாராக இருந்தாலும் வார்த்தைகளை சரியாக பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 6 அடி கூட கொடுக்கவில்லை இந்த அரசு திரும்ப வரக்கூடாது என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அது அவருடைய கருத்து, இன்றைக்கு கலைஞருக்கு எங்கு சமாதி அமைந்துள்ளது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.