”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்

உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன்

மரியாதை இல்லாத கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியில் இணைவது தவறு கிடையாது என பொன்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு தொலைபேசி வாயிலாக பேசிய பொன்.ராதாகிரிஷ்ணன், ”கு.க.செல்வம் பாஜகவில் இணைவதில் தவறில்லை மரியாதை இல்லாத கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியில் இணைவது தவறு கிடையாது” என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 8 வருடங்களாகவே திமுக நிர்வாகிகள் மனதளவில் கொந்தளிப்பில் உள்ளனர் என்றும், அந்த கொந்தளிப்பு எப்போது வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது என தெரிவித்த அவர், மரியாதை இல்லாத இடத்தில் யார் இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

Also read... சென்னையின் பிரதான பகுதிகளில் இன்று (14-08-2020) மின்தடை அறிவிப்பு - உங்கள் பகுதியை செக் பண்ணிக்கோங்க...

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நிலை  சரியில்லாமல் ஆன பிறகு  திமுகவில் யாருக்கும் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. அந்த கொந்தளிப்பு வெளிப்படாமல் இருந்து வந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு பொறுப்பு கொடுத்ததால்  "பால் பொங்கி வெளியே  வருவதை போல திமுக நிர்வாகிகள் வெளியே வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.



தொடர்ந்து இன்னும் பல முக்கிய திமுக நிர்வாகிகள் பாஜகவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வெளியே வரக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அதிமுக பாஜக கூட்டணி தலைமை குறித்து மாநிலத் தலைவர் விளக்கம் கொடுத்துவிட்டார் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: