கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தினகரனிடம் நான் கேட்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18-னின் முதன்மை செய்தியாளர் குணசேகரனுக்கு, டிடிவி.தினகரன் அளித்த பேட்டியில், நெல்லை, குமரி தொகுதிகளில் சிறுபான்மையினரை நிறுத்த பா.ஜ.க வற்புறுத்தியது. பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக தூது அனுப்பினார் என்றும் இதுவரை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார்.
டி.டி.வி.தினகரனின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. டி.டி.வி.தினகரனின் கருத்துக்கு கருப்பு முருகானந்தம் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று நான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை. தேர்தல் நெருங்கும் போது தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அந்த கட்சி தலைவர்கள் பரபரப்பு கிளப்புவது வாடிக்கை.
டி.டி.வி.தினகரனும் அப்படி பரபரப்பு கிளப்பி உள்ளார். கருப்பு முருகானந்தம், தினகரன் ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு தினகரனுடன் நல்ல நட்பு உண்டு. பல விஷயங்களுக்கு அவரிடம் பேசி இருக்கலாம். எனக்கு தெரிந்து இது ஒரு நாள் செய்திக்கு பயன்படலாம். மற்றபடி எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.