• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கேரள போலீஸூடன் வாக்குவாதம்: மக்களவையில் புகார் எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன்

கேரள போலீஸூடன் வாக்குவாதம்: மக்களவையில் புகார் எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நிலக்கல் பகுதிக்கு வந்தவுடன் அதற்கு மேல் செல்வதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர். அப்போது நிலக்கல் எஸ்.பி யதீஷ் சந்திராவுக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சபரிமலைக்கு செல்லும்போது தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேரளா மாநில காவல் அதிகாரி மீது மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்தார்.

    சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரள மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து, சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில், நவம்பர் மாதம் 20-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது ஆதரவாளர்களுடன் இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்றார். அப்போது, சபரிமலையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நிலக்கல் பகுதிக்கு வந்தவுடன் அதற்கு மேல், தனியார் வாகனத்தில் செல்வதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர். அப்போது நிலக்கல் எஸ்.பி யதீஷ் சந்திராவுக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இறுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேருந்தில் ஏறிச் சென்றார். இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘சபரிமலைக்கு தனியார் வாகனங்களை அனுமதிப்பதால் பிரச்னை ஏற்படப்போவதில்லை. அதுபற்றி கேட்டதற்கு பொறுப்பான பதில் இல்லை. அதிகாரி யதீஷ் சந்திராவோ, வாகனத்தை அனுமதித்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் பொறுப்பேற்க முடியுமா என கடுமையான தொனியில் கேட்டார். அதனை மக்களவை உறுப்பினருக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதி உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருகிறேன்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: