முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ₹1000 - வெளியான அட்டகாச அறிவிப்பு...

பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ₹1000 - வெளியான அட்டகாச அறிவிப்பு...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Polytechnic Students: பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி  வழங்கப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பதிலுரை அளித்தார்.  அப்போது, அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றார். கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொழிற்கல்வி படிப்பான பாலிடெக்னிக் சேரும் மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்றார்.

Also Read: கல்லூரி சேரும் மாணவிகள் மாதம் ₹1000 பெற என்ன தகுதி? முழு விவரம்

அரசு கல்லூரிகளை அடுத்த 5 ஆண்டுகளில் மேம்படுத்துவது தொடர்பாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பெருந்தலைவர் காமராஜர் அரசு கல்லூரி மேம்பாடு திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் 2022- 2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

First published:

Tags: DMK, Minister Palanivel Thiagarajan, MK Stalin, TN Assembly, Women's College