நாகையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கைது.. ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்..

நாகையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கைது.. ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்..

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

அரிசி ஆலையில் லஞ்சம் பெற்றபோது திருவாரூரில் பிடிபட்ட நாகை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் வீட்டில் நடந்த சோதனையில் 3 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

  • Share this:
நாகப்பட்டினத்தில் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் வீட்டில் கணக்கில் வராத 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆண்டோ சிட்டி பகுதியில் குடியிருக்கும் வனராஜ், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். திருவாரூரில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையின் காற்று மற்றும் நீர் உரிமத்தை புதுப்பிக்க 40 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையுகளவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் படிக்க...70 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் இணையத்தில் வெளியானது..

இந்த நிலையில் நாகை ஆண்டோ சிட்டி பகுதியில் உள்ள பொறியாளர் தனராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: