சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீரை சட்ட விரோதமாக வெளியேற்றும் வாகனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்யுமாறு போக்குவரத்து துறைக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பு விடுத்துள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், “சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் கழிவுநீர் நீர்நிலைகள், காலி நிலங்களில் ஊற்றப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. புகாரின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்தி ஆய்வில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், திறந்த வெளிகளில் லாரிகள் மூலம் கொண்டுச்செல்லப்படும் கழிவுநீா் வெளியேற்றுவது கண்டறியப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இத்தகைய செயல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், “சட்டவிரோதமாக கழிவுநீரை வெளியேற்றுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், “இதனை மீறுபவர்கள் குறித்து பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது அருகிலுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். அல்லது 18004256750 என்ற எண்ணில் தொடா்பு கொண்டோ, மின்னஞ்சல் மூலமாகவோ புகார் கொடுக்கலாம் ”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Clean india, Tamil Nadu