' ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டுகிறார் கணவர்' ஆட்சியரிடம் புகாரளித்த பொள்ளாச்சி பெண்
' ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டுகிறார் கணவர்' ஆட்சியரிடம் புகாரளித்த பொள்ளாச்சி பெண்
ஆட்சியரிடம் புகார் அளித்த மனைவி
ஆபாச புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுவதால் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக கணவனே மிரட்டுகிறார் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி முகநூல் மூலம் அறிமுகமான மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அஜித் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அஜித் குமார் வேறு திருமணம் செய்யும் நோக்கில் தன்னை விரட்ட முயற்சிப்பதாகவும், மயக்க மருந்துகளை வழங்கி ஆபாச புகைப்படங்களை எடுத்து மிரட்டுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
அத்துடன் தமது நகைகளை பறித்துக்கொண்டு தம்மை கொடுமைப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார். மேலும், கடந்த இரண்டு மாதாமாக வீட்டில் அடைத்து வைத்து மது கொடுத்து குடிக்கச்சொல்லியும், பல நேரங்களில் தன்னை மயக்கமாக்கி என்ன நடந்தது என்றே தெரியாத வண்ணம் அஜித்குமார் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆபாச புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுவதால் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
Also see... BREXIT தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி!
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.