Home /News /tamil-nadu /

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : அடிதடி வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ அறிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : அடிதடி வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ அறிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அடிதடி வழக்கை கைவிடுவதாக கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த ஆண்டில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசின் நண்பர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு, பெண்ணின் சகோதரரை தாக்கியது ஆகிய இரண்டு வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லாததால், மேல் நடவடிக்கையை கைவிடுவதாக கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, விசாரணையை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் இறுதி வாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Pollachi sexual harassment

அடுத்த செய்தி