பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தத்தை அதிமுகவின் அடிப்படி உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இவர்கள் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை கூறி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அருளானந்தம், பாபு, ஹேரேன் பால் ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு கைது செய்தது.
மேலும் படிக்க...பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- பொள்ளாச்சி ஜெயராமன்
கைது செய்யப்ட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணை வளையத்தில், மேலும் 3 சிக்கி இருக்கும் நிலையில் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அருளானந்தம், பாபு, ஹேரேன் பால் ஆகிய 3 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி முன்பு சிபிஐ ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தத்தை அதிமுகவின் அடிப்படி உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.