Home /News /tamil-nadu /

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுக பிரமுகரின் மகனுக்கும் சிபிசிஐடி சம்மன்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுக பிரமுகரின் மகனுக்கும் சிபிசிஐடி சம்மன்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

இந்த வழக்கில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயூரா ஜெயக்குமாருக்கு, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திமுக பிரமுகரின் மகனுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

கோவை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கியக் குற்றவாளியான, திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுகவின் கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும் அவர் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமாருக்கு, போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், தற்போது திமுக பிரமுகரின் மகனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பொள்ளாச்சி வழக்கில், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... பணம் பறிமுதல்... தேர்தல் அதிகாரிகளுடன் அனிதாகுப்புசாமி 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Pollachi, Pollachi sexual harassment

அடுத்த செய்தி