SP Velumani : எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்த இதுதான் உள்நோக்கம் - பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

உள்ளாட்சி தேர்தலில் எங்களை சோர்வடைய வைக்கவே இந்த நடவடிக்கை எனினும் இந்த நடவடிக்கைகள் எங்களை சோர்வடைய வைக்காது.

  • Share this:
    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து கருத்து கூறியுள்ள, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளாட்சி தேர்தலில் எங்களை சோர்வடைய வைக்கவே இந்த நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், “இந்த சோதனை அரசியல் வாங்கும் நடவடிக்கை. உள்ளாட்சி தேர்தலில் எங்களை சோர்வடைய வைக்கவே இந்த நடவடிக்கை எனினும் இந்த நடவடிக்கைகள் எங்களை சோர்வடைய வைக்காது.

    ஓப்பந்தங்கள் நேரடியாக அமைச்சர் கொடுப்பதில்லை. அதிகாரிகளுக்குதான் தெரியும். இந்த சோதனையால் அதிமுக, கோவை மாவட்டத்தில் இன்னும் வலுவடையும். மாலை வரை நடந்தால் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள்.

    Must Read : எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அதிமுகவினர் போராட்டம்

    இந்த சோதனையால் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் ஓரே நேரத்தில் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியும், அதிகாரமும் திமுகவிடம் இருப்பதால் சோதனை நடத்துகின்றனர். இந்த போக்கை கைவிட வில்லை என்றால் திமுக மேலும் பின்னடைவை சந்திக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திமுக கொடுத்த 506 வாக்குறுதிகளில் ஓன்றிரண்டை மட்டுமே நிறைவேற்றி இருக்கின்றனர். வெள்ளை அறிக்கையில் எதுவும் இல்லை. அது அவர்களுக்கு சிவப்பு அறிக்கையாக எச்சரிக்கையாக மாறிவிட்டது.” என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published: