• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொள்ளாச்சி பாலியல் விவகாரம்... சிறையில் அடைக்கப்பட்டார் திருநாவுக்கரசு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்... சிறையில் அடைக்கப்பட்டார் திருநாவுக்கரசு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நீதிபதி இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார் திருநாவுக்கரசு.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான திருநாவுக்கரசு சிபிசிஐடி காவல் காவல் முடிந்து சிறையில் அடைப்பு.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திருநாவுக்கரசுவுக்கு 5 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்த நிலையில் சிறையிலடைக்கப்படார்.

    பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக, அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை இக்கும்பல் மிரட்டி வந்ததாக தகவல் வெளியானது.

    தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டார். பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. சிபிசிஐடி காவல் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், நீதிபதி இல்லத்திற்கு திருநாவுக்கரசு இன்று காலை அழைத்து வரப்பட்டார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நீதிபதி இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார் திருநாவுக்கரசு.

    இந்நிலையில் திருநாவுக்கரசுக்கு நாளைவரை நீதிமன்ற காவல் உள்ளதால் அவரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசு சிறையில் அடைக்கப்பட்டார். நாளை மீண்டும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: