• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் - தேர்தல் ஆணையம்

நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் - தேர்தல் ஆணையம்

பாண்டியராஜன்

பாண்டியராஜன்

Pollachi Case | பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அரசு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை வெளியிட்டதற்காக எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், தவறுதலாக பெண்ணின் பெயர் வெளியாகிவிட்டதாக கூறினார்.

    Read Also... “எப்போ செய்யப்போறீங்க... எதுக்காக காத்துக்கிட்டு இருக்கீங்க...” முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி

    இதனை அடுத்து, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் பயந்துபோய் புகாரளித்துவிடக்கூடாது என்பதற்காக பெயர்கள் இப்படி அப்பட்டமாக வெளியிடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

    Read Also... இரவில் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட திருநாவுக்கரசு...!

    இது தொடர்பான வழக்கில் இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அரசு தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    சத்யபிரதா சாஹு


    மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காகவும், வழக்கின் ஆரம்ப நிலையிலேயே 4 பேருக்கு மட்டுமே தொடர்பு என்று கூறியதற்காகவும் மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டனர்.

    எனினும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எஸ்.பி மீது தமிழக அரசு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “எஸ்.பி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. அந்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை மட்டும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கினால் போதும்” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: