முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்... வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல்

காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்... வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல்

காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்... வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பொள்ளாச்சியில் 16 வயது பள்ளிச் சிறுமியை கர்ப்பமாக்கி கொலை மிரட்டல் விடுத்த யாசின் என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையின் வடு மறையாத நிலையில், அங்கு ஒரு பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கற்பமடைந்துள்ளார். வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய இளைஞர் போலீசில் சிக்கியுள்ளார்.

பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் யாசின். இவர் பொள்ளாச்சியில் பள்ளி ஒன்றில் பயிலும் 16 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

மாணவியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவி யாசினிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த யாசின் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெற்றோரிடமும் சொல்ல முடியாமல், வெளியிலும் சொல்ல முடியாமல் மாணவி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவியே தனியாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

இதை அடுத்து போலீசார் பெற்றோருக்கு தகவல் சொல்லி வரவழைத்தனர். அங்கு சென்ற பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது, நடந்ததை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். யாசின் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர்.

பொள்ளாச்சி ஆட்டோ நிறுத்தத்தில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Pollachi