பட்டியலின வெளியேற்றத்தால் கலவரம் ஏற்பட வாய்ப்பு - தமிழக பாஜக தலைவர் மீது கொங்கு ஈஸ்வரன் காட்டம்

தமிழகத்தில் சாதி கலவரங்களை உண்டாக்க பாஜக தமிழ் மாநில தலைவர் முருகன் முயற்சிப்பதாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பட்டியலின வெளியேற்றத்தால் கலவரம் ஏற்பட வாய்ப்பு - தமிழக பாஜக தலைவர் மீது கொங்கு ஈஸ்வரன் காட்டம்
கொங்கு ஈஸ்வரன் (படம்: Facebook)
  • Share this:
பட்டியலினத்தில் உள்ள குறிப்பிட்ட 7 சமூகப் பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர்கள் என அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், அதை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதலானோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்காமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு புது பெயர் வைக்க, முயற்சிப்பதாக சாடியுள்ளார்.

Also see:பட்டியலின வெளியேற்றம் வேண்டுமென ஒருசிலர் மட்டுமே கோரிக்கை வைக்க, மற்றவர்கள் எதிர்த்து வருவதை சுட்டிக்காட்டும் ஈஸ்வரன், வாக்கு வங்கிக்காக இவ்வாறு செய்தால் அவர்களுக்குள்ளேயே கலவரங்கள் வெடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று தமிழக பாஜக தலைவர் களம் இறங்கியிருப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தமிழகத்தில் சிறிதளவு இருக்கின்ற வாக்கு வங்கியையும் இழப்பதற்கு வழிவகுக்கும் என்றும் கொங்கு ஈஸ்வரன் எச்சரித்துள்ளார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading