Home /News /tamil-nadu /

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

முத்துராமலிங்க தேவர் சிலை

முத்துராமலிங்க தேவர் சிலை

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி மற்றும் 56-வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

  • News18
  • Last Updated :
    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி மற்றும் 56-வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் இறுதி நாளான இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்ட முதலமைச்சர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் முத்துராமலிங்கத் தேவருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களை செய்துள்ளதாக நினைவு கூர்ந்தார்.

    முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மதுரையில் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஸ்டாலின், பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை திமுக பின்பற்றும் என உறுதி அளித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Guru pooja, Muthuramalinga Thevar

    அடுத்த செய்தி