Rajinikanth | ரஜினியின் ஆதரவை பெற முயற்சிக்கும் அரசியல் கட்சிகள்..

ரஜினிகாந்த்

ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்த நிலையிலும் சட்டமன்ற தேர்தலில் அவரது ஆதரவை பெறுவதற்காக, அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன.

  • Share this:
    ரஜினி அதிமுகவிற்கு ஆதரவளிப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்

    உடல் நலக்குறைவு காரணமாக அரசியலை தவிர்த்துள்ள ரஜினிகாந்த், நலமுடன் வாழ வேண்டும் என்பதே தங்களது ஆசை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மட்டும் அல்லாமல் ரஜினியும் அதிமுகவிற்கு ஆதரவளிப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.

    ரஜினியை விமர்சித்ததற்கு சீமான் வருத்தம்

    கடந்த காலங்களில் ரஜினியை அரசியல் ரீதியாக விமர்சித்தது, அவரையும், அவரது குடும்பத்தினரையும் பாதித்திருந்தால் அதற்கு வருந்துவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் -கமல்

    ரஜினி கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்துள்ள நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அவருடைய ஆதரவை கேட்பேன் என புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம் - அர்ஜூன் சம்பத்

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவரின் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து அவரின் ஆசியோடு 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் பொது வாழ்க்கை பண்புகள் பாழடைந்துவிட்டதாகவும், அரசியல், ஊழல் மலிந்த சாக்கடையாக சரிந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

    மேலும் படிக்க...Rajinikanth Politics: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தது முதல் அரசியல் களம் காணாமலே பின் வாங்கியது வரை.. (வீடியோ)

    இங்கு நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை எனக் கூறியுள்ள தமிழருவி மணியன், இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன் என்றும் தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்" என்றும் கூறியுள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: